உலகம்
இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கிடையே வானியல் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.!
பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கிடையே வானியல் துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் இந்திய வானியற்பியல் நிறுவனம், பெங்களூரு மற்றும் ஸ்பெயினில் உள்ள இன்ஸ்டிட்யூட்டோ டெ ஆஸ்ட்ரோபிசிகா டெ கானரியஸ் மற்றும் தி கிராண்டெகான் எஸ் ஏ-வுக்கு இடையே கையெழுத்தாகும்.
புதிய அறிவியல் முடிவுகள், புதிய தொழில்நுட்பங்கள், கூடுதலான அறிவியல் உரையாடல் மற்றும் பயிற்சியின் மூலம் திறன் வளர்த்தல் மற்றும் கூட்டு அறிவியல் திட்டங்கள் உள்ளிட்டத் துறைகளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Leave your comments here...