இந்து பெண்கள் குறித்து அவதூறு பேச்சு : திருமாவளவன் மீது இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்த பாஜகவினர்..!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசிய நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாக பாஜக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறாரக்கள். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமாவளவன், தான் பேசியது திரித்து கூறப்பட்டிருப்பதாகவும், மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளதையே தான் குறிப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து குமரி மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் பிரியா சதீஷ் அவர்களின் தலைமையில் இரணியல் காவல்நிலையத்தில் திருமாவளவன் மீது புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து அளித்துள்ள புகார் மனுவில்:- நான் கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக செயல்பட்டு வருகிறேன். இன்று 24-10-2020ம் தேதி காலை 10.00 மணிக்கு நான் எனது முகநூலை பார்த்துக் கொண்டிருக்கும் போது விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் என்பவர் ஒரு வீடியோவில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசும் போது இந்து பெண்கள் அனைவருமே விபசாரிகள் தான் என்று கொச்சையாக பேசியுள்ளார் மேலும், இந்து சாஸ்த்திரங்களில் இதுபோன்று இருப்பதாக ஒரு பொய்யான அவதூரான கருத்தை பதிவேற்றியுள்ளார்.
இது வேண்டுமென்றே இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை துண்டும் வகையிலும், அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து பெண்களை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக இந்து மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், இந்து மதத்தினரை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி இந்து மதத்தினரை சினம் ஊக்கமூட்டும் நோக்கத்திலும், மத அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான காட்சிப்படுத்தல் மூலம் வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும், வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் இந்து மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும், பெண்களின் மாண்பை கொச்சைப்படுத்தும் வகையிலும் வேண்டுமென்றே பதிவிடப்படுள்ளது.
எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள திருமாவளவன் மற்றும் பெரியார் Youtube channel ஐ நிர்வகிப்பவர்கள் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 295(A), 296, 298, 499, 504, 509, 188 மற்றும் எ IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.இதில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக செயலாளர் மனோகர குமார், தக்கலை தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பத்மகுமார், செயலாளர் வினோத் காமராஜ், ஜலஜா குமாரி, கண்ணாட்டுவிளை கிரிஜா, பொருளாதார பிரிவு தலைவர் ராம நாராயணன், தக்கலை வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசிங் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் பிரேம்ஜித் கவுதம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Leave your comments here...