உலகளாவிய வளர்ச்சி மீண்டும் வேகம் பெற கூட்டு நடவடிக்கையை ஜி20 அமைப்பு உறுதி செய்ய வேண்டும் நிதியமைச்சர் வலியுறுத்தல்..!
- October 18, 2019
- jananesan
- : 860
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற ஜி20 மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையிலான இந்தியக் குழு கலந்து கொண்டது.
இதில் நிதியமைச்சர் தலைமையிலான இந்தக் குழு வாஷிங்டனில் நடைபெற்று வரும் சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்திலும் பங்கேற்றது.
ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில், உலகப் பொருளாதாரம் தற்போது சந்தித்து வரும் சவால்கள் குறித்தும், இதனைக் குறைப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகப் பொருளாதாரத் தேக்க நிலையை சமாளிக்க உறுதியான நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பு ஜி20 அமைப்புக்கு உண்டு என மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Picture For:- Finance Minister, Smt.nirmala sitharaman led the Indian delegation at #G20 and #BRICS Finance Ministers and Central Bank Governors meetings on the side-lines of the IMF/World Bank Annual Meetings in Washington DC, USA
மேலும் தேக்கநிலையை சமாளிக்க, சீர்திருத்த நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உலகளாவிய வளர்ச்சி மீண்டும் வேகம் பெற கூட்டு நடவடிக்கையை ஜி20 அமைப்பு உறுதி செய்ய வேண்டியது அவசியம் என நிதியமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.