மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா அக்.17-ல் தொடக்கம்: பக்தர்களுக்கு அனுமதி.l
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா அக்.17 முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த நாட்களில் நடக்கும் அம்மனின் அலங்காரங்களை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. நவராத்திரி நாட்களில் தினமும் மாலை 4 மணி முதல் 5. 30 மணி வரையும் மாலை 6 .45 முதல் இரவு வரை 8 மணி வரையும் பக்தர்கள் மூலஸ்தான அம்மனை தரிசிக்கலாம் . மாலை ஐந்து முப்பது மணி முதல் 6.45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் திரைபோட்டு அபிஷேகம் பூஜைகள் நடக்கும்.
அந்த சமயம் பக்தர்கள் கொலு மண்டபத்தில் உள்ள உற்சவர் அம்மனை தரிசிக்கலாம். அம்மன் மூலவர் அலங்காரத்தை முதல் நாளில் தரிசிக்காதவர்கள் மறுநாள் காலை 6 முதல் 7 மணி வரை தரிசிக்கலாம். அக்டோபர் 17ம் தேதியான நவராத்திரி முதல் நாள் அம்மன் ராஜேஸ்வரி அலங்காரத்திலும் 8ம் தேதி வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த அலங்காரத்திலும் 19ம் தேதி சுவாமி தன்னைத்தானே பூஜித்தல் அலங்காரத்திலும், அலங்காரத்திலும் 20ம் தேதி விறகு விற்றல் அலங்காரத்திலும் 21ம் தேதி கடம்ப வாசினி அலங்காரத்திலும், 22ம் தேதி வேல்வனை செண்டு தொடுத்தல் அலங்காரத்திலும் 23ம் தேதி பட்டாபிஷேகமும் 24ம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும்,25 ம் தேதி சிவபூஜை அலங்காரத்திலும் அருள்பாலிப்பார் என்றும் நிர்வாக அதிகாரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...