நாடு முழுவதும் வரும் 15-ம்தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு..!
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தில் மத்திய அரசு அவ்வபோது தளர்வுகளை அறிவித்து வந்தது.
அந்த வகையில், தற்போது அக்.,31 வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வரும் 15ம் தேதி முதல் பொழுது போக்கு பூங்காக்கள் செயல்படவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், பொழுது போக்கு பூங்காக்களை திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
* பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல்குளம் செயல்பட தடை.
* பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள உணவு கூங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும்.
* பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
* கர்ப்பிணிகள், 65வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி தரக்கூடாது.
* பொழுதுபோக்கு பூங்காவில் அதிக அளவில் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.
* பொழுதுபோக்கு பூங்காவிற்கான டிக்கெட்டை ஆன்லைனில் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...