மனோவியல் மருந்துகளை கடத்திய மருந்து ஏற்றுமதியாளர் : சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது

தமிழகம்

மனோவியல் மருந்துகளை கடத்திய மருந்து ஏற்றுமதியாளர் : சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது

மனோவியல் மருந்துகளை கடத்திய மருந்து ஏற்றுமதியாளர் : சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது

மனோவியல் மருந்துகளை கடத்திய மருந்து ஏற்றுமதியாளர் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்

மனோவியல் மருந்துகள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த நுண்ணறிவுத் தகவலின் அடிப்படையில், அமெரிக்காவுக்கு செல்லவிருந்த இரண்டு தபால் பொட்டலங்களை அயல்நாட்டு தபால் நிலையத்தில் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர்.

கருப்பு கார்பன் காகிதத்தால் சுற்றப்பட்டு முதல் பொட்டலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 அட்டைகள் அல்ப்ராசோலம் கண்டறியப்பட்டது. மொத்தம் 300 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இன்னொரு பொட்டலத்தில் இருந்து, 155 லோரசெபம், க்ளோனாசெபம் மற்றும் டையசெபம் ஆகிய மாத்திரைகள் அதே முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மொத்தம் 455 மனோவியல் மருந்துகள் தேசிய போதை மருந்து தடுப்பு சட்டம், 1985-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.


மதுரையில் இருந்து அமெரிக்காவின் டென்னெசி மற்றும் அர்கன்சாஸ் மாநிலங்களில் உள்ள கல்லாட்டின் மற்றும் அலெக்சாண்டர் ஆகிய நகரங்களுக்கு இந்த பொட்டலங்கள் அனுப்பப்பட்டிருந்தன. தொடர் விசாரணையில், மதுரையில் ஆயுர்வேத, சித்த மற்றும் ஆங்கில மருந்துகள் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நபர் ஒருவர் இவற்றை அனுப்பி இருப்பது தெரியவந்தது. போதை மருந்து தடுப்பு ஆணையரின் அனுமதி இல்லாமல், பே பால் மூலம் பணம் பெற்றுக் கொண்டு, போலி பெயரில் இந்த மருந்துகளை அவர் அனுப்பியது கண்டறியப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருந்து மற்றும் அழகு சாதன விதி 1945-இன் ‘ஹெச்’ மற்றும் ‘ஹெச் 1’ பட்டியலில் இருக்கும் தேசிய போதை மருந்து தடுப்பு சட்டம், 1985-இன் கீழ் வரும் இந்த மனோவியல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு போதை மருந்து தடுப்பு ஆணையரின் அனுமதி தேவை. அழுத்தம், வலிப்பு மற்றும் பயம் ஆகியவற்றின் சிகிச்சைக்கு இந்த மருந்துகள் பயன்படுத்தப்படும். இவற்றை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்துவார்கள். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

Leave your comments here...