புதுச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.!
புதுச்சேரியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 45-இல் கட்டமைக்கப்பட்டுள்ள பாலத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
புதுச்சேரியில் உள்ள அரும்பார்த்தபுரத்தில் தேசிய நெடுஞ்சாலை 45-இல் கட்டப்பட்டுள்ள ஒரு கிலோமீட்டர் நீள பாலத்தை காணொலி மூலம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
Inauguration of Arumparthapuram Road Over Bridge on NH 45A, Puducherry https://t.co/upHtNVnjEe
— Nitin Gadkari (@nitin_gadkari) October 7, 2020
ரூ 35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், வில்லியனூர், அரியூர், கண்டமங்கலம், மானவெளி, கோரிமேடு, ஆரோவில் மற்றும் அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் நீண்ட நாள் தேவையை பூர்த்தி செய்துள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி கே சிங், யூனியன் பிரதேச அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Hon'ble Minister of @MORTHIndia Shri @nitin_gadkari Ji inaugurated the road-over-bridge at Arumparthapuram, Puducherry VIA Video Conferencing.
HLG @thekiranbedi, HCM @VNarayanasami , Hon'ble MoS @Gen_VKSingh, Ministers from Puducherry, pic.twitter.com/9g1OqQngOo— Lt. Gov. Puducherry (@LGov_Puducherry) October 7, 2020
காணொலி மூலம் உரையாற்றிய திரு கட்கரி, போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நேரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தவும், பாதுகாப்பான பயணத்துக்காகவும், ரயில் தண்டவாளத்தை கடப்பதை தவிர்க்கவும், ரயில்களின் தடையில்லாத போக்குவரத்துக்காகவும் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலை-45 நான்கு வழி சாலையாக மாற்றப்படுவதன் மூலம் கன்னியாகுமாரி வரை தடையில்லா போக்குவரத்துக்கான வழி ஏற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Leave your comments here...