மக்காச்சோளம் படைப்பூழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு செயல் முறை விளக்கப் பயிற்சி.!
இராஜபாளையம் வட்டாரத்தில் மக்காச்சோளம் படைப்பூழு தாக்குதலை கட்டுப்படுத்துவது வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு செயல் முறை விளக்கப் பயிற்சி அளித்தனர்.
இராஜபாளையம் வட்டாரத்தில் சுமார் 1700 ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுக்கின்றன. தற்போது விதைப்பு பணி நடைபெறுவதால் அதில் ஏற்படும் படைப்பூழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்களை ஆட்டோ மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டது.
இதில் இராஜபாளையம் சுற்றியுள்ள மேலராஜகுலராமன், எஸ்.ராமலிங்காபுரம்,சோழபுரம், கோபாலபுரம், வடகரை,தென்கரை, கொருக்காம்பட்டி, வரகுணராமபுரம், நத்தம்பட்டி ஆகியவை கிராமங்களுக்கு செல்லப்பட்டது.
இதில் வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இக்கிராமங்களில் பேவேரியா பேசியானா கொண்டு விதை நேர்த்தி செய்தல், வேப்பணெண்ணெய் கரைசல், மெட்டாரைசியம் கரைசல் தெளித்தல், வரப்பு பயிர் எள் மற்றும் சூரியகாந்தி விதைத்தல் ,ஊடுபயிராக உளுந்து, பாசி விதைப்பு போன்ற செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டதைப் பார்வையிட்டார்.
மேலும் கிராமந்தோறும் துண்டு பிரசுரம் மற்றும் சுவரொட்டி கள் விவசாயிகளும் வழங்கப்பட்டது. இப்பிரசாரத்தில் வேளாண்மை அலுவலர் தனலட்சுமி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Leave your comments here...