டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!
புதுக்கோட்டை அருகே உள்ளது துவரிமான் கிராமம். இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இதனை அகற்ற கோரி பொதுமக்கள் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் ,டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது.இதனையடுத்து மீண்டும் டாஸ்மாக் கடை திறந்து வைக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, பொதுமக்கள் திடீரென்று மேலக்கால்- மதுரை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை எதிரே 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கருணாகரன், பழனிச்சாமி உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் டிஎஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கியராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் ஆகியோர் மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.அதற்கு கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் செய்த பெண்கள் கலைந்து சென்றனர்.
இதனால், ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Leave your comments here...