சென்னை விமான நிலையத்தில் ரூ 39.5லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!
சென்னை சுங்கத் துறையினரால் ரூ 39.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
துபாயில் இருந்து ஃபிளை துபாய் விமானம் எஃப் இசட் 8517 மூலம் சனிக்கிழமை அன்று சென்னை வந்த காஜா மைதீன், 33, மற்றும் முகமது ஷேர்கான், 21, ஆகியோர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து சுங்க வருகைக் கூடத்தின் வெளியேறும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களைச் சோதனை செய்து பார்த்தபோது தலா 232 கிராம் எடையுள்ள இரண்டு தங்க கட்டிகள் கண்டறியப்பட்டன. மேலும், இருவரும் தங்களது கால் சட்டைப் பைகளில் ஒளித்து வைத்திருந்த தங்க துண்டும் (31 கிராம்) பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூபாய் 27.4 லட்சம் மதிப்புடைய 526 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
சனிக்கிழமை இரவு அன்று நடந்த இன்னும் இரு சம்பவங்களில், துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஐ எக்ஸ் 1644 விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த அப்துல் ஜலீல் முகமது அலி, 33, மற்றும் சென்னையை சேர்ந்த முகமது அப்துல் அமீது, 39, ஆகியோர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து தடுத்து நிறுத்தப்பட்டனர்.
Chennai Air Customs: 758 gms gold worth Rs. 39.5 lakhs seized under Custom Act from 4 pax who arrived from Dubai by flts FZ 8517 & AI IX 1644 on saturday. Gold was concealed in their socks and pant pockets. pic.twitter.com/VTKKMSX2t4
— Chennai Customs (@ChennaiCustoms) October 4, 2020
அவர்களைச் சோதனை செய்து பார்த்தபோது அவர்களது கால் உரைகளில் இரண்டு பொட்டலங்கள் தங்க பசையும், அவர்களது கால் சட்டைப் பைகளில் இருந்து தங்க சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூபாய் 12.16 லட்சம் மதிப்புடைய 232 கிராம் தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூபாய் 39.56 லட்சம் மதிப்புடைய 758 கிராம் தங்கம் சுங்க சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.இந்த தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...