யாசகம் எடுக்கும் பணத்தை 15 வது முறையாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கிய முதியவர்.!
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். பொதுச்சேவையில் ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.
பூல்பாண்டியன் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் அரசுப்பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தைக் கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15-வது முறையாக கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.10 ஆயிரத்தைக் வழங்கினார், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியன். இவர், மதுரை மாட்டுத் தாவணி பகுதியில் யாசகம் எடுக்கும் பணத்தை செலவு போக, மீதிப் பணத்தை சேமிக்காமல், கொரோனா நிவாரணத் தொகை வழங்கி வருகிறார் பூல்பாண்டியன்.இதுவரையிலும் 14 முறை யாசகம் எடுத்த பணத்தை வழங்கியுள்ளார்
Leave your comments here...