கனமழை காரணமாக கீழடி அகழாய்வு பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

தமிழகம்

கனமழை காரணமாக கீழடி அகழாய்வு பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

கனமழை  காரணமாக  கீழடி அகழாய்வு பணி தற்காலிகமாக நிறுத்தம்.!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. கொரானா வைரஸ் காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டு மீண்டும் ஜூன் மாதம் தொடங்கியது.

அதன் பிறகு கொரானா நோய்த்தொற்று அச்சத்தின் காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் அகழாய்வு பணிமட்டும் நடந்து வந்தது. முதலில் நடந்த 5 அகழாய்வு பணிகளும் கீழடியில் மட்டுமே நடைபெற்றது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்று வந்தது. இதனிடையே கீழடியில் ஆய்வுப் பணியின் போது கிடைத்த பொருட்களை பாதுகாக்கவும், காட்சிப்படுத்ததவும், அருங்காட்சியம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும், தொடர்ந்து நடைபெற்ற அகழாய்வில், பெண்கள் அணியும் அணிகலன்கள், வளையல்கள், கத்தி போன்ற ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றன. மேலும் கொந்தகையில் முதுமக்கள் தாழி, மண்டை ஓடுகள், மற்றும் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கிடைக்கப்பெற்றன. சமீபத்தில் அகரத்தில் 26 அடுக்கு உறை கிணறு கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து அகழாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் கீழடியை சுற்றி உள்ள பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்ததன் காரணமாக அகழாய்வுப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும், இன்று 30-ம் தேதியுடன் ஆறாம் கட்ட அகழாய்வுப்பணி நிறைவடையும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குழிகளில் இருக்கும் மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். அதன் பிறகு குழிகளின் அளவீடு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடைபெறும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Leave your comments here...