ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் ..!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்
சிறுவனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவர் மெய்யப்பன் கார்த்திக் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கண்ணங்குடி வட்டார மருத்துவர் டாக்டர் ராஜாராம் தலைமையில் 50 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த முகாமில் பங்கேற்றனர். இம்முகாமில் ரத்த அழுத்தம் ரத்தப் பரிசோதனை மற்றும் அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன கே. சிறுவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாரணமங்கலம், அண்டக்குடி, வளையல் மற்றும் பல கிராம மக்கள் சுமார் 150 க்கு மேற்பட்டவர்கள் இம்மருத்துவ முகாமில் பரிசோதனை செய்தனர்.
வருடத்திற்கு மூன்று முறை நடக்கும் சிறப்பு மருத்துவ முகாமில் முதல் முகமாக இந்த முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பருவமழை தொடங்கியதால் பருவ மாற்றத்தினால் உடலில் ஏற்படும் சிறுசிறு உபாதைகளை இம்மருத்துவ முகாமில் மூலம் சரி செய்ததாக முகாமில், கலந்துகொண்ட பயன்பட்ட பயனாளிகள் கூறினார்கள்
Leave your comments here...