உலக அளவில் அமைதியை நிலைநாட்ட அதிக உயிர்தியாகம் செய்தது இந்தியா தான் – ஐ.நா., பொது சபையில் பிரதமர் மோடி பேச்சு
ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய் நிகர் முறையில் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தின் நிகழ்ச்சிப்படி, இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்:- காலத்திற்கேற்ப ஐ.நா.,சபையும் மாற வேண்டிய நிலை வந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் ஐ,நா., பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஐ.நா சபை நிறுவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் பெருமை கொள்கிறது. நமது தேவைகளும் சவால்களும் இன்று புதியவையாக உள்ளன. “இது ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக இருப்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில், இந்தியாவின் 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள இந்த உலகளாவிய தளத்திற்கு வந்துள்ளேன்.
Addressing the @UN General Assembly. https://t.co/dvWANn20Mg
— Narendra Modi (@narendramodi) September 26, 2020
உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது. ஐ.நா சபை சீர்திருத்தங்களுக்காக இந்தியா எவ்வளவு நாள் காத்து கொண்டிருப்பது. கொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.சபையின் நாடுகளின் பங்கு என்ன ? கொரோனாவை எதிர்கொள்ள உலகளாவிய ஒற்றுமை தேவை. கொரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா மூன்றாம் கட்டத்தில் உள்ளது. கொரோனாவால் ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தனது கடமையை சிறப்பாக செய்துவருகிறது. மனித குலத்திற்கு எதிரான செயல்களை கண்டிக்க இந்தியா ஒரு போதும் தயங்கியதில்லை. சுயநலம் கருதாது மனித வள மேம்பாட்டிற்காக இந்தியா பாடுபடுகிறது. உலக அளவில் அமைதியை நிலைநாட்ட அதிக உயிர்தியாகம் செய்தது இந்தியா தான். அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை அளிப்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. பெண்கள் தொழில்முனைவோர் மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்த இந்தியாவில் பெரிய அளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய பெண்கள், இன்று, உலகின் மிகப்பெரிய நுண் நிதி திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள். பெண்களுக்கு 26 வாரங்கள் சம்பள மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என கூறினார்.
Leave your comments here...