மூலிகை தாவரங்கள் சாகுபடியை ஊக்குவிக்க தொழில்துறை அமைப்புகளுடன் ஆயுஷ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.!
மூலிகை தாவரங்கள் சாகுபடியை ஊக்குவிக்க தொழில்துறை அமைப்புகளுடன் ஆயுஷ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது
மூலிகை தாவரங்கள் சாகுபடியை ஊக்குவிக்க முக்கிய ஆயுஷ் மற்றும் மூலிகை தொழில் அமைப்புகளுடன், ஆயுஷ் அமைச்சகம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும்.
ஏடிஎம்எம் (ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளர் சங்கம்), மும்பை, ஏஎம்ஏஎம் (ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தியாளர் சங்கம்), புதுதில்லி, ஏஎம்எம்ஓஐ( இந்திய ஆயுர்வேத மருந்து உற்பத்தியாளர்கள் அமைப்பு) திருச்சூர், எஎச்என்எம்ஐ(இந்திய மூலிகை மற்றும் ஊட்டச்சத்து தயாரிப்பாளர் சங்கம்), மும்பை; எப்ஐசிசிஐ (இந்திய தொழில் கூட்டமைப்பு) , தில்லி மற்றும் சிஐஐ, தில்லி ஆகிய அமைப்புகளுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேச்சா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. தொழில் துறையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆயுஷ் அமைச்சகம் வழங்கும் என்றும், அனைவரும் ஒருங்கிணைந்த குழுவாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ராஜேஷ் கொடேச்சா கூறினார்.
Leave your comments here...