பெங்களூரு கலவரம் தொடர்பாக 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு : ஏர்கன் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல்

இந்தியா

பெங்களூரு கலவரம் தொடர்பாக 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி ரெய்டு : ஏர்கன் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல்

பெங்களூரு கலவரம் தொடர்பாக 30 இடங்களில் என்.ஐ.ஏ  அதிரடி ரெய்டு : ஏர்கன் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல்

கர்நாடகாவின் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாச மூர்த்தி. இவரது தங்கை மகன் நபிகள் நாயகம் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை கருத்து பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11-ம் தேதி இரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் வீடு சூறையாடப்பட்டது. அப்பகுதி காவல் நிலையத்தையும் கலவர கும்பல் அடித்து உதைத்தது. இதனை எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் முன்னின்று நடத்தியதாக பா.ஜ.க., குற்றம்சாட்டியது.

கலவரத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 4 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை செவ்வாயன்று தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு எடுத்தது. இன்று அவ்வழக்கு தொடர்பாக 30 இடங்களில் ரெய்டு நடத்தினர்.

இந்த சோதனைகளின் போது ஏர்கன், கூர்மையான ஆயுதங்கள், இரும்பு தடிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் எஸ்.டி.பி.ஐ மற்றும் எஸ்.எப்.ஐ., தொடர்புடைய குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர். கலவரத்திற்கு சதி செய்ததாக வங்கி வசூல் பணியாளரான சையது சாதிக் அலி என்பவரையும் கைது செய்தனர். எஸ்.டி.பி.ஐ., இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

Leave your comments here...