சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், பொது போக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.ஆனாலும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும், அவசரத் தேவைகளுக்காக செல்லும் மக்களுக்காகவும் ஒரு சில சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த சூழலில் தற்போது சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு 3 சிறப்பு ரெயில்கள் (சென்னை- திருவனந்தபுரம், சென்னை – மைசூரு, சென்னை- மங்களூரு) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 27-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Leave your comments here...