10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாலை போக்குவரத்து சம்மேளனம் மற்றும் அனைத்து மோட்டார் வாகன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்து, செட்டியார்பட்டி சங்கத் தலைவர் சேகவபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வைரஸ் தொற்று காரணமாக வாகனங்கள் இயங்காததால், 6 மாத கால சாலைவரியை ரத்து செய்ய வேண்டும், வாகனங்களில் நல்ல நிலையில் இருக்கும் வேகக்கட்டுபாடு கருவிகளுக்கு உடனே எப்.சி சான்று கொடுக்க வேண்டும், வாகனங்களுக்கு வங்கிகளில் பெற்றுள்ள கடன் தவணை கட்டுவதற்கு, 1 ஆண்டு காலம் நீட்டிப்பு செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் இவைகளின் ஜிஎஸ்டி வரியை, வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், ஆர்டிஓ அலுவலகத்தில் கட்டண விவரங்களை அனைவரும் பார்க்கும் வகையில், போர்டுகளில் எழுதி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ராஜபாளையம் சிஐடியூ டாக்ஸி, வேன் ஓட்டுனர் சங்கம், தளவாய்புரம், செட்டியார்பட்டி, முறம்பு, சத்திரபட்டி, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மோட்டார் சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Leave your comments here...