திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பட்டு சென்றது : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலை, கிளி, பரிவட்டம்.!

ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பட்டு சென்றது : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலை, கிளி, பரிவட்டம்.!

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு புறப்பட்டு சென்றது : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலை, கிளி, பரிவட்டம்.!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக திருமலை புறப்பட்டு சென்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இருந்து ஒவ்வொரு வருடமும் திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் போது மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்பசாமி சாற்றுவது வழக்கம். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் ராமானுஜர் துவங்கி வைத்த இந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது.

அதனடிப்படையில் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் 5-ம் திருநாளான கருட சேவை அன்று மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி மலையப்பசாமிக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இருந்து மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு தொடர்ந்து நான்கு சக்கர வாகனம் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக இன்று காலை ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செல்லும் மாலை ஆனது நேற்று மாலை முதல் கோவில் வளாகத்திலேயே வைத்து மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரிய வகை மலர்களால் தயாரிக்கப்பட்டது. திருப்பதிக்கு மாலை செல்லும் இந்த விழாவில் திருக்கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோ உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave your comments here...