இ-கிராம் ஸ்வராஜ் தளம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி ; தமிழகத்திற்கு மொத்த ஒதுக்கீடு ரூபாய் 3607 கோடி.!
ஊரக இந்தியாவுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பஞ்சாயத்துகளை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்தும் வகையில், இ-கிராம் ஸ்வராஜ் என்னும் ஒருங்கிணைந்த தளத்தை (https://egramswaraj.gov.in/) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிப்பதற்காகவும், மதிப்பிடுவதற்காகவும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.2020-21-ஆம் ஆண்டில், சுமார் 2.43 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் தங்களது வளர்ச்சி திட்டத்தை இ-கிராம் ஸ்வராஜ் தளத்தில் இறுதி செய்துள்ளன. சுமார் 1.24 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இந்த தளத்தின் ஆன்லைன் பரிவர்த்தனை வசதியின் மூலம் பரிவர்த்தனைகள் செய்துள்ளன.28 மாநிலங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்க 15-வது நிதி ஆணையம் தன்னுடைய 2020-21-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறியுள்ளது.
2020 ஜூன் 17 மற்றும் 2020 ஜூலை 15 ஆகிய தேதிகளில் தலா ரூபாய் 15187.50 கோடி நிதி அமைச்சகத்தால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு ரூபாய் 3607 கோடி ஆகும்.
Leave your comments here...