உணவு கழக கிடங்குகளில், உணவு தானியங்கள் சேதம் அடைவதில்லை: மத்திய அமைச்சர் தகவல்
இந்திய உணவு கழக கிடங்குகளில், உணவு தானியங்கள் சேதம் அடைவதில்லை என மத்திய அமைச்சர் தான்வேராவ் சாகிப் தாதாராவ் தகவல் கூறியுள்ளார் .
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் தான்வேராவ் சாகிப் தாதாராவ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தி பதிலில் கூறியதாவது:
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019, 2020ம் ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. இந்த புதிய சட்டத்தின் படி, நுகர்வோருக்கு ஏராளமான பாதுகாப்பு கிடைக்கிறது. தயாரிப்பாளர் அல்லது விற்பனையாளர் அல்லது சேவை அளிப்போர் மற்றும் வாடிக்கையாளர் இடையேயான ஒப்பந்தத்தில் நியாமற்ற நடைமுறைகளை திணிக்க முடியாது.ஒப்பந்தத்தை மீறும் வாடிக்கையாளருக்கு அபராதம் விதிப்பது, வாடிக்கையாளர் தனது கடனை முன்கூட்டியே செலுத்தினால் அதை ஏற்க மறுப்பது போன்றவை எல்லாம் ஒப்பந்தத்தில் நியாயமற்ற நடைமுறைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்குகள் குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும். சில விதிவிலக்கான சூழலில் மட்டுமே இந்த வழக்குகளை ஒத்தி வைக்க வேண்டும், அப்போது அதற்கான காரணம் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்.நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டு 2459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1435 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பாசிபருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் சில்லரை விலை கடந்த ஏப்ரல் மாதம் முறையே 26.75% மற்றும் 7.25% அதிகரித்துள்ளது.இந்திய உணவு கழக சேமிப்பு கிடங்குகளில், கொள்முதல் செய்யப்படும் அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவு தானியங்கள் அறிவியல் பூர்வமாக சேமித்து வைக்கப்படுவதால், அவைகள் வீணாவதில்லை.
Leave your comments here...