அமெரிக்காவில் டிக்டாக் செயல்பட அனுமதி: அதிபர் டிரம்ப்.!
சீனாவின் டிக்டாக் செயலி அமெரிக்காவில் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து வாஷிங்டன்னில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டிரம்ப், ‛ டிக்டாக் தலைமை நிறுவனமான பட்டேன்ஸ், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் இவை மூன்றும் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் டிக்டாக், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும்’.‛ஒப்பந்தத்தின் மூலம் புதிய நிறுவனத்தின் 53 சதவீத பங்குகளை அமெரிக்கர்களும் 36 சதவீத பங்குகளை சீனர்களும் வைத்திருக்க வேண்டும். முக்கிய தொழில்நுட்பங்களுக்கும், அமெரிக்கர்களின் தகவல்கள் பாதுகாப்பிற்கும் ஆரக்கிள் நிறுவனம் பொறுப்பேற்கும்’ இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார் .
இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளித்துள்ள டிரம்ப் இதன் மூலம் டிக்டாக் பயன்படுத்தும் அமெரிக்கர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
Leave your comments here...