பேராவூரணி அருகே திருவத்தேவனில் துணை மின் நிலையம் திறப்பு.!

அரசியல்தமிழகம்

பேராவூரணி அருகே திருவத்தேவனில் துணை மின் நிலையம் திறப்பு.!

பேராவூரணி அருகே திருவத்தேவனில் துணை மின் நிலையம் திறப்பு.!

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே திருவத்தேவன் பகுதியில், 33/11 கி.வா துணை மின் நிலையத்தை, காணொளிக் காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். 

இதையொட்டி திருவத்தேவன் துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். 

இந்த நிகழ்ச்சியில், மின்வாரிய செயற்பொறியாளர் வி.மாறன், உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன், உதவி மின் பொறியாளர் ஸ்ரீராம், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் சேதுபாவாசத்திரம் வடக்கு நாடியம் சிவ.மதிவாணன், தெற்கு அருணாச்சலம், பேராவூரணி தெற்கு கோவி.இளங்கோ, சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் விஜயா காந்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் திருவத்தேவன் முரளி, அடைக்கத்தேவன் ஆறுமுகம், குப்பத்தேவன் பாலமுருகன், செந்தலை ரகுமத்துல்லா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுதாகர், சையது முகமது, பாமா செந்தில்நாதன், சாகுல், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அம்மணிசத்திரம் பாலு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கணேசன், அருள்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இத்துணை மின்நிலையம் 16 எம்.வி.ஏ திறனுடன் டிடியூஜிஜேஒய் திட்டத்தில் அமைக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியதன் மூலம், திருவத்தேவன் பகுதியைச் சுற்றி உள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தடையில்லா சீரான மின் விநியோகம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Leave your comments here...