திமுகவின் உட்கட்சி தேர்தலில் இஸ்லாமியர்களை திட்டமிட்டு புறக்கணித்துள்ளனர் : ஏகத்துவ ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

அரசியல்

திமுகவின் உட்கட்சி தேர்தலில் திட்டமிட்டு இஸ்லாமியர்களை புறக்கணித்துள்ளனர் என ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில்: மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை பிரசார யாத்திரை மேற்கொண்டுள்ளோம். மத்திய அரசுக்கு எதிரான திமுக காங்கிரஸ் கட்சியினரின் பொய் பிரசாரத்தை முறியடிப்பதே எங்கள் நோக்கம். ‘நீட்’ தேர்வுக்கு எதிராக திமுக அவதுாறு பிரசாரம் செய்கிறது. இத்தேர்வு மாணவர்களுக்கு எதிரானது போன்று எதிர்கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். திமுகவின் உட்கட்சி தேர்தலில் திட்டமிட்டு இஸ்லாமியர்களை புறக்கணித்துள்ளனர்.

பாஜக, முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி போலவும், திமுக தான் முஸ்லிம்களை காப்பாற்றும் என்பது போன்றும் பொய் பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். மொழி அறிவை மேம்படுத்த மத்திய அரசு ஹிந்தியை மூன்றாவது மொழியாக கற்க வாய்ப்பளிக்கிறது. ஆனால், ஹிந்தியை திணிப்பதாக திமுக பொய் பிரசாரம் செய்கிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஹிந்தி பேசும் மாநிலங்களில் தமிழை மூன்றாம் மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். வரும் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...