சூர்யாவின் நீட் அறிக்கை : பேனர் வைத்து ரசிகர் இறந்தால் சினிமாவை தடை செய்து விடுவீர்களா – காயத்ரி ரகுராம் கேள்வி.?

அரசியல்

சூர்யாவின் நீட் அறிக்கை : பேனர் வைத்து ரசிகர் இறந்தால் சினிமாவை தடை செய்து விடுவீர்களா – காயத்ரி ரகுராம் கேள்வி.?

சூர்யாவின் நீட் அறிக்கை : பேனர் வைத்து ரசிகர் இறந்தால் சினிமாவை தடை செய்து விடுவீர்களா – காயத்ரி ரகுராம் கேள்வி.?

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று(செப்., 13) நாடு முழுவதும் நடந்து முடிந்தது. இந்த தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதை சுட்டிக்காட்டியும், ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நீட் எதிர்ப்பையும் சுட்டிக்காட்டி இருதினங்களாக சமூகவலைதளங்கள் உள்ளிட்டவைகளில் பெரும் விவாதம் நடக்கிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.


அதில், ‛நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்’. ‛கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்வுக்கு வாழ்த்து சொல்ல வேண்டி நாம் இப்போது ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கிறது என தெரிவித்தார்.


இந்நிலையில் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் டுவிட்டரில் சூர்யாவின் அறிக்கையை சுட்டிக்காட்டி, ”நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் முதல்நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் தங்களது சொந்த பணத்தில் நடிகர்களுக்காக பேனர் வைக்கிறார்கள். சமயத்தில் அப்படி வைக்கும்போது தவறி விழுந்து உயிர் இழக்கின்றனர். இதற்காக சினிமாவையே தடை செய்து விடலாமா. தயவு செய்து மாணவர்களை தைரியமாக தேர்வை எதிர்கொள்ள சொல்லி ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நோயாளிகளை பரிசோதிக்கும் போது அதுவும் ஒரு வித பரீட்சை தான்” என பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...