கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பலன் தந்துள்ளது – உலக சுகாதார அமைப்பு
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
இதுவரையில் ரஷ்யா மட்டுமே தனது ஸ்புட்னிக்-5 தடுப்பூசி தயாராகிவிட்டதாக கூறியிருக்கிறது. அதுவும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மற்ற நாடுகளும் தடுப்பூசி சோதனையை துரிதப்படுத்தியுள்ளன. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பலனளித்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், தீவிரமாகவும், கடுமையாகவும் பாதித்த நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பலன் தந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவுக்கு எதிராக 180 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 35 தடுப்பூசிகள் மனித சோதனை கட்டத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
Leave your comments here...