5 ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று பாரம்பரிய முறைப்படி இணைப்பு.!
இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தன.
அவற்றை முறைப்படி விமான விமானப்படையில் இணைக்கும் நிகழ்ச்சி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் 5 விமானங்களும் இணைக்கப்படுகின்றன.
பாரம்பரிய முறைப்படி சர்வ தர்மா பூஜையுடன் கூடிய நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர். அதைதொடர்ந்து, இருதரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
Leave your comments here...