இந்திய வம்சாவளியினரை கவர பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வீடியோ’வை வெளியிட்ட அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி.!

உலகம்

இந்திய வம்சாவளியினரை கவர பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வீடியோ’வை வெளியிட்ட அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி.!

இந்திய வம்சாவளியினரை கவர பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வீடியோ’வை வெளியிட்ட அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி.!

அமெரிக்காவில், நவம்பர், 3ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். இங்குள்ள முக்கிய மாகாணங்களில், வெற்றியை தீர்மானிக்கும் மக்களாக, இந்திய வம்சாவளியினர் இருக்கின்றனர்.

இவர்களை தங்கள் பக்கம் இழுக்க, ஜனநாயக கட்சி, துணை அதிபர் வேட்பாளராக, இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசை களமிறக்கியது. இது, ஜனநாயக கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை கவரும் முயற்சியாக, இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவை பிரதிபலிக்கும் வீடியோவை குடியரசு கட்சி, கடந்த மாதம் வெளியிட்டது.’மேலும் நான்கு ஆண்டுகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவின் துவக்கத்தில், கடந்த ஆண்டு, ஹூஸ்டனில், அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்ற, ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியின் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல், இந்த ஆண்டு துவக்கத்தில், குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த, ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியின் சில காட்சிகளும், இதில் இணைக்கப்பட்டுள்ளன. வீடியோவின் இறுதியில், இந்தியா மீது, அமெரிக்கா வைத்துள்ள விசுவாசத்தை, அதிபர் டிரம்ப் வெளிபடுத்துவது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது, அமெரிக்காவிற்கு மரியாதை உள்ளதாகவும், இந்திய மக்களின் நம்பிக்கையான மற்றும் விசுவாசமான நண்பராக, அமெரிக்கா விளங்கும் என்றும், டிரம்ப் கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது

Leave your comments here...