தற்சார்பு இந்தியா : இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை பயன்படுத்த முக்கியத் துறைமுகங்களுக்கும் மத்திய கப்பல் அமைச்சகம் அறிவுறுத்தல்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே முக்கியத் துறைமுகங்கள் இனி பயன்படுத்தும், தற்சார்பு இந்தியாவை நோக்கிய பெரிய நடவடிக்கை என அமைச்சர் தகவல்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே கொள்முதல் செய்ய அல்லது பயன்படுத்த அனைத்து முக்கியத் துறைமுகங்களையும் மத்திய கப்பல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.. முக்கியத் துறைமுகங்களால் இனி செய்யப்படும் அனைத்துக் கொள்முதல்களும் திருத்தப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ உத்தரவின் படி தான் இருக்க வேண்டும்.
இந்திய கப்பல் கட்டும் தொழிலை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள கப்பல் அமைச்சகம், கப்பல் கட்டுதலை இந்தியாவில் மேற்கொள்ள முன்னணி நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. அரசின் இந்த முடிவு கப்பல் கட்டுதலை இந்தியாவில் மேற்கொள்ளும் லட்சியத்தை அடைவதற்கான முக்கிய நடவடிக்கையாக இருக்கும். மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மன்சுக் மண்டாவியா, பழைய கப்பல் தளங்களைப் புதுப்பிக்கவும், கப்பல் கட்டுதலை இந்தியாவில் ஊக்குவிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே முக்கியத் துறைமுகங்கள் இனி பயன்படுத்த வேண்டும் என்னும் முடிவு, தற்சார்பு இந்தியாவை நோக்கிய பெரிய நடவடிக்கை என அமைச்சர் கூறினார்.
Leave your comments here...