குமரி மாவட்ட தீயணைப்பு வீரர்களின் பேரிடர் கால ஒத்திகை.!
குமரி மாவட்ட தீயணைப்பு வீரர்களின் பேரிடர் கால ஒத்திகையானது நடைப்பெற்றது.
கன்னியாகுமரி அடுத்த சுசீந்திரம் தபால் நிலையம் அருகே உள்ள பழையாற்றில் தீயணைப்பு துறையினர் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை எப்படி பாதுகாப்பது உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது தீயில் சிக்கி இருக்கும் மக்களை காப்பது குறித்த ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனர்.
பருவகாலங்களில் மழை வெள்ளங்களால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருக்கலாம் ஆகவே அங்கு இருக்கும் வீடுகள் மழை வெள்ளம் நிறைந்து மக்கள் வெளிவரமுடியாமல் தவிப்பவர்களை காப்பாற்றுவது தீயணைப்பு வீரர்களின் கடமை.அதே போல் கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்ப தாக்கத்தாலும் மற்றும் மின் கசிவு காரணமாகவும் தீ விபத்துகள் ஏற்படுவதுண்டு இந்த இக்கட்டான சூழலிலும் தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்கள் சேவை செய்து வருகின்றனர்.
இதற்கு தமிழக அரசு தீயணைப்பு துறையிருக்கு துறை சார்ந்த உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் என வழங்கி உள்ளது மக்கள் ஆபத்தில் இருக்கும் போது நமக்கு நியாபகம் வரும் நபர் என்றால் அவர்கள் தீயணைப்பு வீரர்கள் தான். இது போன்ற வீரதீர செயல்களை அவர்களும் தங்களை தானே அடிக்கடி சோதனை செய்து பார்த்து கொண்டு எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.அது போல் இன்றும் அதற்கான ஆயத்தமாக பேரிடர் கால ஒத்திகை நடைப்பெற்றது..இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இந்த ஒத்திகையில் பயிற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறை டிஎஸ்பி சரவணகுமார் , ஆர்டிஓ மயில் மற்றும் அதிகாரிகள் தீயணைப்பு வீரர்களின் ஒத்திகையை பார்வையிட்டனர்.
Leave your comments here...