ஐ.நா., சபை கூட்டத்தில் செப்டம்பர் 26ல் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்..!
ஐ.நா., சபையின் பொதுக்கூட்டம் செப்.,22 முதல் 29 வரை நடைபெற உள்ளது. சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் இந்த ஆண்டு, பொது சபை கூட்டம் மெய்நிகர் முறையில் நடைபெற உள்ளது. எந்த நாட்டின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை. அதற்கு மாறாக, உலக தலைவர்கள் தங்களது உரையை வீடியோவில் பதிவு செய்து அனுப்ப உள்ளனர். அது ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளையும், பட்டியலையும் ஐ.நா., அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.இதன்படி வரும் செப்.,26ம் தேதி காலை பிரதமர் மோடியின் உரை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உரை இடம்பெற உள்ளது.
இரண்டாவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், மட்டும் நேரடியாக உரையாற்ற உள்ளார். இதற்காக அவர், நியூயார்க் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.துருக்கி அதிபர் எர்டோகன், சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோரும் மெய்நிகர் முறையில் உரையாற்ற உள்ளனர்.
Leave your comments here...