உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி மரத்தை “சிஎஸ்ஐஆர் – சிஎம்ஈஆர்ஐ” உருவாக்கியுள்ளது.!
உலகிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மரத்தை மத்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் – மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (Council of Scientific and Industrial Research – Central Mechanical Engineering Research Institute – CSIR-CMERI) உருவாக்கியுள்ளது.
இது துர்காபூரில் உள்ள மத்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் – மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சிக் கழகக் குடியிருப்புக் காலனியில் நிறுவப்பட்டுள்ளது. மத்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் – மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர்.ஹரிஷ் ஹிராணி இந்தத் தொழில்நுட்பம் குறித்து விவரித்தார். நிறுவப்பட்ட இந்த சூரிய சக்தி மரத்தின் திறன் 11.5 கே டபிள்யு பி க்கும் அதிகமாகும். தூய்மையான சுற்றுச்சூழலுக்கு இயைந்த 12,000 முதல் 15,000 யூனிட்டுகள் மின்சக்தியை இதனால் ஆண்டொன்றுக்கு தயாரிக்க முடியும்.
ஒவ்வொரு சூரிய சக்தி பி வி பேனலும், மிக அதிகபட்ச சூரியசக்தியைப் பெறும் வகையில் இந்த சூரியசக்தி மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல் இதற்குக் கீழே மிகக் குறைந்த பட்ச நிழல் பகுதி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மரத்திலும் 35 சோலார் பி வி பேனல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 330 w.b. திறன் கொண்டவை. இந்த சூரிய சக்தி பி வி பேனல்களை தாங்கிக் கொண்டிருக்கும் கை போன்ற அமைப்புகள் வளையும் தன்மை கொண்டவை. எனவே அவற்றை தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். இந்த அம்சம் கூரைமேல் அமைக்கும் சூரியசக்தி மாதிரி வசதிகளில் இல்லை. மின்சக்தி உற்பத்தி விவரங்களை உடனுக்குடன் அல்லது நாள்தோறும் கண்காணிக்கலாம். பேராசிரியர் டாக்டர்.ஹரிஷ் ஹிரானி விவரித்துக் கூறியதாவது: மத்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் – மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் வடிவமைத்துள்ள இந்த சூரியசக்தி மரம் உலகிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி மரம் மட்டுமல்ல; பல்வேறு விதமான இடங்களில் பொருத்தக் கூடிய அளவிற்கு தனிப்பட்ட சில அம்சங்கள் கொண்டவையாகும். இது குறைந்தபட்ச நிழல் பகுதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், வேளாண் செயல்பாடுகளுக்கு பயன்படும் உயர்திறன் கொண்ட பம்புகள் இ டிராக்டர்கள், இ மின் டில்லர்கள் போன்ற பலவிதமான பயன்பாடுகளுக்கு இந்த சூரியசக்தி மரங்களின் உற்பத்தி பயன்படுத்தப்படும்.
விலை ஏற்றத்தாழ்வுகள் கொண்ட புதைபடிவ எரிபொருள்களுக்கு ஒரு மாற்றாக, வேளாண்மைக்கு இந்த சூரியசக்தி மரங்கள் பேருதவியாக இருக்கும். புதைபடிவ எரிபொருள் மூலமாகக் கிடைக்கும் மின்சக்தி உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், சூரியசக்தி மரங்கள் மூலமாக கிடைக்கும் சக்தியின் போது வெளியிடப்படும் கரியமிலவாயு 10 முதல் 12 டன் வரை குறைவாகவே இருக்கும். இவை தவிர இவற்றால் உற்பத்தி செய்யப்படும் கூடுதல் மின் சக்தியை, எனர்ஜி கிரிட் அமைப்பில் செலுத்த முடியும்.
வேளாண் தொடர்பான செயல்பாடுகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளின் விளைவுகளில் இருந்து, விவசாயிகளைப் பாதுகாக்கவும் சீரான பொருளாதாரம் நிலவவும் உதவும் வகையில், இந்த வேளாண் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் உழவுத்தொழில் பொருளாதார ரீதியாகவும், எரிசக்தி சேமிப்பு தொடர்ந்து நிலவக்கூடிய முறையாகவும் பலனளிக்கும் வகையில் மாறும்.
ஒவ்வொரு சூரியசக்தி மரமும் 7.5 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை. ஆர்வமுள்ள சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள், இந்த வர்த்தக மாதிரியை பிரதமர் கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மகாப்யான் (பிரதமர் குசும்) என்ற திட்டத்துடன் இணைந்து செயல்படுத்திக் கொள்ளலாம். இதனால் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அடிப்படையிலான எனர்ஜி கிரிட்டை உருவாக்க முடியும்.
இந்த சூரியசக்தி மரம் ஐ ஓ டி அடிப்படையிலான அம்சங்களையும் இணைத்துக் கொள்ள வல்லது. அதாவது வேளாண் வயல்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது, தட்பவெட்ப நிலை குறித்து அப்போதைக்கப்போது தெரிந்து கொள்வது, காற்றின் வேகம் மழை முன்னெச்சரிக்கை, மண் ஆய்வு உணரும் கருவி ஆகியவற்றைப் பொருத்திக் கொள்வது போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. மத்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் குழுமம் – மத்திய இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சிக் கழக அமைப்பால் உருவாக்கப்பட்ட சூரியசக்தி கொண்ட இ சுவிதா கியாஸ்க்குகளையும் இந்த சூரிய சக்தி மரத்துடன் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் வேளாண் தரவுகள் புள்ளி விவரங்கள் அனைத்தையும் அணுகுவதற்கான வசதி கிடைக்கும். தேசிய வேளாண் சந்தை இடங்கள் இநாம் (eNam) இணைய தளத்துடன் தொடர்பு கொள்ளவும் இது உதவும். எரிசக்தி சார்ந்த கார்பன் இல்லாத நாடாக இந்தியா உருவாக இது மிகப்பெரிய சக்தியாகும்.
Leave your comments here...