அண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜகவில் சேர்ந்தால் இவர்களுக்கு என்ன எரிச்சல் : ஹெச்.ராஜா கேள்வி- வீடியோ உள்ளே..!

அரசியல்

அண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜகவில் சேர்ந்தால் இவர்களுக்கு என்ன எரிச்சல் : ஹெச்.ராஜா கேள்வி- வீடியோ உள்ளே..!

அண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜகவில் சேர்ந்தால் இவர்களுக்கு என்ன எரிச்சல் : ஹெச்.ராஜா கேள்வி-  வீடியோ உள்ளே..!

அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் எல்லை மீறி பேச வேண்டாம், கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக அரசை நான் என்றும் விமர்சனம் செய்து பேசியதில்லை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மதுரையில் பேட்டி.

மதுரையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “மத்திய நிதியமைச்சரை ஊறுகாய் மாமியார் என விமர்சனம் செய்த முன்னாள் நீதிபதி சந்துருவின் பேச்சு கண்டனத்துக்குரியது, அனகாரிகமான நபர் நீதிபதியாக இருந்துள்ளார் என்பது வருந்தத்தக்கது, முன்னாள் நீதிபதி சந்துரு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், அண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜகவில் சேர்ந்தால் இவர்களுக்கு என்ன எரிச்சல், நீதிபதி சந்துருவின் தீர்ப்புகள் நடுநிலையாக இருந்திருக்குமா என சந்தேகம் வருகிறது, இந்து விரோத செயலில் ஈடுபட்ட சகாயம் ஐ.ஏ.எஸின் செயலை ஏன் சந்துரு, ஹரி பரந்தாமன் கருத்து சொல்லவில்லை.

அமைச்சர் செல்லூர் ராஜு இப்படி அப்படி பேசுவது வழக்கமாக போய் விட்டது, அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் எல்லை மீறி பேச வேண்டாம், கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக அரசை நான் என்றும் விமர்சனம் செய்து பேசியதில்லை, தமிழக அரசு அதிகாரிகள் செய்யும் தவற்றை சுட்டி காட்டி வருகிறேன், அமைச்சர்கள் பாஜகவை விமர்சனம் செய்து பேசுவத் கூட்டணிக்குள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது, கூட்டணியில் பிளவு ஏற்ப்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் சர்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்களா என சந்தேகம் எழுகின்றன, பாஜகவை இழிவாக பேசுவதும், பிரதமரை இழிவாக பேசுவதும் ஒன்று தான், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும், நாடு முழுக்க பாஜக செயல்பட்டு வருகிறது, ராகுல்காந்தி மாதிரியான அரசியல் அரைவேக்காடு குறித்து ஏன் கேள்வி எழுப்ப தேவையில்லை, ராகுல்காந்தி ஒரு செமி இத்தாலியன்” என கூறினார்

Leave your comments here...