பெங்களூருவில் இருந்து சோலாப்பூருக்கு இயக்கப்படும் ரோரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார் – முதல்வர் எடியூரப்பா..!
பெங்களூருவில் இருந்து சோலாப்பூருக்கு இயக்கப்படும் ‘ரோரோ’ ரயில் சேவையை முதல்வர் எடியூரப்பா இன்று துவக்கி வைத்தார்
ரோரோரயில் என்பது ரயில்களின் வேகன்களில் சரக்கு லாரிகளை ஏற்றிச் செல்வது ஆகும். இந்த ரயில்களில் ஏற்றப்படும் லாரிகளில் அதன் டிரைவர் மற்றும் கிளினர்கள் பயணிப்பர் அந்தந்த லாரிகள் பயணிக்க வேண்டியகுறிப்பிட்ட ரயில் நிலையம் வந்த உடன் லாரிகள் இறக்கி விடப்படும். இதற்கு பெயர் தான் ரோரோ ( ரோல் ஆன்- ரோல் ஆப்).இத்தகைய ரயில் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் வரை இயக்கப்படுகிறது. சுமார் 682 கி.மீ பயணிக்கும் இந்த ரயில் 17 மணி நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை சென்றடையும்.
ஒரே நேரத்தில் ஒரு ரயிலில் 42 லாரிகளை ஏற்றிச்செல்ல முடியும். இதன் மூலம் விபத்துக்கள் குறைவதுடன் எரிபொருள் சேமிப்பு,சாலை பாதுகாப்பில் முன்னேற்றம் ,காற்று மாசுபாடு குறைவு, சாலை போக்குவரத்தை விட செலவு குறைவு போன்றவை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருட்கள் , அழியக்கூடிய பொருட்கள், உணவுபொருட்கள் , மற்றும் சிறிய சரக்குகளை விரைவாக கொண்டு செல்லஉறுதி செய்கிறது. இந்த ரயில் தர்மவரம், குண்டக்கல், ரெய்ச்சூர் மற்றும் வாடி வழியாக மகாராஷ்டிராவின் சோலாப்பூர் அருகே பேல் என்ற இடத்தை சென்றடையும்.
Karnataka Chief Minister BS Yediyurappa flags off Roll-On/Roll-Off (RO-RO) train between Bengaluru (Nelamangala) to Solapur (Maharashtra) through video conferencing. pic.twitter.com/vsCi6QUjR1
— ANI (@ANI) August 30, 2020
இந்த ரயில் போக்குவரத்தை இன்று மாநில முதல்வர் எடியூரப்பா பெங்களூரு புறநகர் ரயில் நிலையமான நெலமகலா நிலையத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மாநில வருவாய்துறை அமைச்சர் அசோகா மற்றும் ரயில்வே மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Leave your comments here...