இன்று முதல் கேரளா பத்மநாபசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி..!

ஆன்மிகம்இந்தியா

இன்று முதல் கேரளா பத்மநாபசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி..!

இன்று முதல் கேரளா பத்மநாபசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி..!

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு, பொதுமக்களுக்காக மூடப்பட்டிருந்த கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் ஆகஸ்ட் 26 இன்று முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த, புகழ்பெற்ற இக்கோவிலுக்கு வருகை தர விரும்பும் மக்களுக்கு, தரிசனம் செய்யப்படும் நேரங்கள் மற்றும் பிற வழிகாட்டுதல்களை கோவில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி: பக்தர்கள் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் மாலை தீபரதனை நேரம் வரையும் கோவில் வளாகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு வரும்போது, பதிவு படிவம் மற்றும் ஆதார் அட்டையின் நகலை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும்.ஒரு நேரத்தில் 35 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நாளில் 665 பேர் மட்டுமே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல் நலக் குறைவு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் வீட்டிலேயே தங்கியிருக்கவும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave your comments here...