கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் லாக்டவுன் விதிகளில் சில தளர்வுகளை மாநில அரசு..!
நாடு முழுக்க கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கொரோனா லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதிலும் தென் மாநிலங்களில் இ – பாஸ் விதிமுறைகள் வேகமாக நீக்கப்பட்டு வருகிறது. நேற்று புதுச்சேரியில் இ பாஸ் நீக்கப்பட்டது.
கர்நாடகாவிற்குள் நுழைய சேவா சிந்து செயலியில் இனி பதிய தேவை இல்லை, அதேபோல் வீட்டு தனிமையில் இருக்க தேவையில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இ பாஸ் முறைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட சேவா சிந்து முறை நீக்கம்.
கர்நாடகா செல்ல சேவா சிந்து செயலியில் இனி பதிய தேவை இல்லை.
மாநில எல்லையில் நடத்தப்படும் பரிசோதனைகளும் நீக்கம்.
ரயில், விமானம், கார், பேருந்து என எதில் வந்தாலும் சோதனை செய்யப்பட மாட்டாது.
கையில் முத்திரை குத்தும் முறை கைவிடப்பட்டது.
14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிமுறையும் ரத்து செய்யப்பட்டது.
வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர் ஓட்டும் முறையும் நீக்கம்.
செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கின் அடுத்த கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 4- ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில், மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதியளிக்க வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், மக்கள் அதிகமாக கூடுவதற்கும், பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave your comments here...