பொம்மை பெட்டியில் வைத்து 78லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தல் – ஒருவர் கைது..!
சென்னை விமானநிலைய சுங்கத்துறை துபாயிலிருந்து தனியாக வந்த பொருள்கள் முனையத்தில், ரூ.78.4 லட்சம் மதிப்புள்ள 1.45 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது.
துபாயிலிருந்து முன்பே வந்த பயணி ஒருவர், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம், தனியாக அனுப்பப்பட்ட தனது பொருள்களை எடுத்துச் செல்ல வந்தார். அந்தப் பொருள்கள் அடங்கிய பெட்டியைத் திறந்து பார்த்த போது, அதில் படுக்கை விரிப்புகள், பொம்மைப் பெட்டிகள் மற்றும் சில பொருள்கள் இருந்தன. படுக்கை விரிப்புகள் அட்டையால் சுற்றப்பட்டிருந்தது. அதை எடுத்த போது, சம்பந்தமில்லாத வகையில் மிகவும் கனமாக இருந்தது.
Chennai Air Customs seized 1.45 kg gold valued @ ₹78.4 lakhs under Customs Act from Unaccompanied Baggage of a pax who arrived from Dubai earlier. Gold foils covered with carbon were found concealed in cardboard sheets kept in toy boxes & bedspreads. Pax Arrested @ianuragthakur pic.twitter.com/yb4arBEGdx
— Chennai Customs (@ChennaiCustoms) August 22, 2020
அதைப் பிரித்துப் பார்த்த போது, கார்பன் பேப்பரால் சுற்றப்பட்டு, அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்த தங்கப்பட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல பொம்மைப் பெட்டிகளிலும் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றிலும் தங்கப்பட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. நான்கு பெட்டிகளிலிருந்து, மூன்று படுக்கை விரிப்புகள் மற்றும் ஏழு பொம்மைப் பெட்டிகளில் இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 1.45 கிலோ எடையுள்ள 10 தங்கப்பட்டைகள் 1962-ஆம் ஆண்டின் சுங்கச் சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.78.4 லட்சம் ஆகும்.
துபாயில் மின்னியல் பணியாளராக வேலை பார்த்த கள்ளக்குறிச்சியைச் ( தமிழகம்) சேர்ந்த அந்தப் பயணி கோவிட்-19 காரணமாக வேலை இழந்தார். அதனால் அவர் அண்மையில் சொந்த ஊருக்கு வந்தார். தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்த அவர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக, சென்னை விமானநிலைய சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave your comments here...