சமாதானப்படுத்த சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி – சந்திக்க மறுத்த சவதி இளவரசர் : சிக்கலில் பாகிஸ்தான்…!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் ஒராண்டு ஆனது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின்(ஓஐசி) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது. உங்களால், அந்த கூட்டத்தை கூட்டாவிட்டால், எங்களுடன் நிற்க தயாராக இருக்கும் இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து கூட்டத்தை கூட்டி காஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்.
காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரசு தலைமையேற்று செயல்பட வேண்டும். அப்படி அவர்கள் செய்யாவிட்டால், சவுதி இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி பிரதமர் இம்ரான் கானை கேட்டு கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார். மேலும் ஐக்கிய அரபு எமீரேட்சையும், குரேஷி விமர்சித்து பேசினார்.சவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த நட்பு, குரேஷியின் இந்த பேச்சால் பாதிப்படைந்தது. சவுதியை கோபப்படுத்தியது. கடன் மற்றும் எண்ணெய் சப்ளை நிறுத்தப்படும் எனக்கூறியதுடன், பாகிஸ்தான் வாங்கிய 1 பில்லியன் அமெரிக்க டாலரை திருப்பி செலுத்தும்படி சவுதி கூறியது. இதனையடுத்து சீனாவிடம் கடன் வாங்கி, சவுதிக்கு பாகிஸ்தான் செலுத்தியது. இதன் காரணமாக இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசல் உண்டாகியுள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவை சமாதானப்படுத்த, பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவர் பைஸ் ஹமீத் ஆகியோர் ரியாத் சென்றனர். அங்கு அவர்கள், அந்நாட்டு பாதுகாப்பு துறை இணையமைச்சர் காலித் பின் சல்மான், ராணுவ தளபதி பையத் பின் ஹமீத்தை சந்தித்தனர். ஆனால், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சவுதியுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டால், பாகிஸ்தானில் செலவு அதிகரிக்கும்.
Leave your comments here...