பிரமாண்ட விநாயகர் சிலை தயாரித்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை..!

அரசியல்தமிழகம்

பிரமாண்ட விநாயகர் சிலை தயாரித்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை..!

பிரமாண்ட விநாயகர் சிலை தயாரித்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை..!

பிரமாண்ட விநாயகர் சிலை தயாரித்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை விடுத்ததுள்ளர்

இது குறித்து அவர் வெளியீட்டு உள்ள அறிக்கையில்:- ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அந்த நாளை தான், விநாயகர் சதுர்த்தியாவும் வட இந்தியாவில் கணேச சதுர்த்தியாகவும் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் சிலைகளை பிரம்மாண்டமாக வைத்து பூஜைகள் செய்து படையல் போட்டு தினந்தோறும் பஜனைகள் பாடி பக்தர்கள் வழிபடுவார்கள். பின்னர் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்சென்று ஆறு, குளங்கள், கடலில் கரைப்பது வழக்கம்.

இந்தாண்டு தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.8.2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.

எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளில் கொண்டாட தமிழகஅரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் இந்து சகோதரர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் மிகுந்த மனஅழத்தத்திற்கு ஆளாக்கப்பட்ட மக்களுக்கு தற்போது சிறிய வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதன் காரணமாக, வழிபாடுகளில் ஈடுபட்டு சிறிதளவு மனநிம்மதி அடைந்துள்ளனர்.விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும் பிரமாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து தொடர் வழிபாடுகளில் இந்து சகோதரர்கள் ஈடுபடுவது வழக்கம், அந்த வகையில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை கடந்த சில மாதங்களாக தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்த தமிழகஅரசு தடை விதித்திருப்பதன் காரணமாக பிரமாண்ட விநாயகர் சிலைகளை தயாரித்தால் மிகுந்த நஷ்டத்திற்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆளாகியுள்ளனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் மண்பாண்ட பொருட்கள் விற்பனை செய்யமுடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள், தற்போது விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு விதித்துள்ள தடையால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

விநாயகர் சிலை வைக்க தடை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழக அரசு அதனை ஏற்று கடும் கட்டுப்பாட்டுகளை விதித்து விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டுமென்றும், பிரமாண்ட விநாயகர் சிலை தயாரித்து பெருமிழப்புக்கு ஆளாகியுள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave your comments here...