கொரோனா பரிசோதனை எடுத்த 24மணி நேரத்தில் முடிவுகள் கொடுக்க தேவையான நடவடிக்கை – சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்
- August 16, 2020
- jananesan
- : 684
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எடுத்த 24மணி நேரத்தில் முடிவுகள் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. ஒரு சில மாவட்டத்தில் மட்டும் 48 மணி நேரம் ஆகிறது என தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி.
மதுரை தேனி மெயின் ரோடு, திருமலை காலனி பகுதியில் நடைபெறும் கொரோனா அறிகுறி,காய்ச்சல் கண்டறியும் முகாமினை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர்.ராதகிருஷ்ணன்,
தமிழகத்தில் 6 வராமாக சராசரி குறைந்து வருகிறது.தொடர்ந்து கண்கணிப்பு தீவிர படுத்தபட்டுள்ளனர்.
மதுரையில் தற்போது தொற்று பரவுவது சராசரி குறைந்துள்ளது.மதுரையில் 300க்கு மேற்பட்ட மருத்துவ முகாம் நடத்தபட்டுள்ளது.தமிழகத்தில் தொற்று கட்டுபடுத்தபட்டதால் அலட்சியமாக இருக்க கூடாது. மதுரையில் நேரடி தொற்று ஏற்பட்டு இறப்பவர் எண்ணிக்கை குறைவு. வேறு தொற்றுடன் கொரோனா தொற்று வருபவர்கள் மட்டும்தான் உயிரிழக்கிறார்கள்.
தமிழகத்தில் சராசரியாக அனைத்து மாவட்டங்களில் 10மடங்கு பரிசோதனை நடத்தபடுகிறது.தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எடுத்த 24மணி நேரத்தில் கூடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. ஒரு சில மாவட்டத்தில் மட்டும் 48 மணி நேரம் ஆகிறது என கூறினார்.
Leave your comments here...